144 தடை உத்தரவால் சென்னையில் சாலையோரம் தங்கியுள்ள முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இதனால் பலர் மயக்கமடைந்து சுயநினைவின்றி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களை பாதுகாப்பு இல்லங்களுக்கு அழைத்து செல்கின்றனர்.