தமிழ்நாடு

Tiruvallur | Onion | லாரியிலேயே அழுகிய 100 டன் வெங்காயம் - லாரி ஓட்டுநர்களின் அவலநிலை

லாரியிலேயே அழுகிய 100 டன் வெங்காயம் - லாரி ஓட்டுநர்களின் அவலநிலை

thanthitv

#Tiruvallur #Onion #Lorry #TNGovt #ThanthiTV

Tiruvallur | Onion Lorry | லாரியிலேயே அழுகிய 100 டன் வெங்காயம் - சோறும் நீரும் இன்றி தவிக்கும் லாரி ஓட்டுநர்களின் அவலநிலை செங்குன்றம் அருகே கூட்டுறவு அங்காடிகளுக்காகக் கொண்டுவரப்பட்ட 100 டன் வெங்காயம் லாரிகளிலேயே அழுகி, புழுக்கள் கொட்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. வெங்காயத்தை கூட்டுறவு அங்காடிகளுக்கு கொண்டு செல்லாமல் தனியாருக்கு விற்பனை செய்யுமாறு கூறியதால், லாரி ஓட்டுநர்கள் சந்தைக்கு கொண்டு சென்று உள்ளனர். சந்தையில் வெங்காயம் தரமானதாக இல்லை என திருப்பி அனுப்பியதால், லாரியில் இருந்த சரக்குகளை அப்படியே வைத்திருக்குமாறு வெங்காயத்தை விநியோகம் செய்வதற்காக இருந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக உணவும் குடிநீருமின்றி லாரி ஓட்டுநர்கள் சாலையோரத்திலேயே தவித்து வருகின்றனர். துர்நாற்றம் வீசி லாரியில் படுக்க முடியாத சூழல் நிலவுவதால், அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அழுகிய வெங்காயத்தைக் கொட்டுவதற்கான அனுமதி வழங்க வேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hogenakkal | Heavy Rain | தொடர் கனமழை - சட்டென மாறிய ஒகேனக்கல் நிலவரம்

Anbil Case | Court | புழல் சிறையில் இருந்து வீடியோ மூலமாக வரும் அன்பில்..

Raid சத்தமில்லாமல் ரெய்டு விட்ட DVAC - தமிழகத்தில் அதிரும் பல முக்கிய புள்ளிகள் வீடு

Scene Movie | சிரித்துக்கொண்டே ஒரே வரியில் சொன்ன நடிகர் கார்த்தி - க்யூட் என்ட்ரி கொடுத்த ஜோதிகா

Chennai | 2½ வயது குழந்தை முன் ரத்த வெள்ளத்தில் தாய் - கணவரே கத்தியால் குத்தி கொன்ற கொடூரம்