தமிழ்நாடு

100 கி.மீ. வேகம் - மத்திய அரசு அறிவிப்பு ரத்து

100 கி.மீ. வேகம் - மத்திய அரசு அறிவிப்பு ரத்து

தந்தி டிவி

100 கி.மீ. வேகம் - மத்திய அரசு அறிவிப்பு ரத்து

நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 100 கிலோ மீட்டர் வரை அதிகரித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.காஞ்சிபுரம் சாலையில் 2013ம் ஆண்டு நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் பல் மருத்துவர் ஒருவருக்கு, 90 சதவீத ஊனம் ஏற்பட்டது.அவருக்கான இழப்பீட்டு தொகையாக 18 லட்சத்து 43 ஆயிரத்து 908 ரூபாயில் இருந்து, 1 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 548 ஆக உயர்த்தி வழங்க நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. அந்த தீர்ப்பில், எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லலாம் என மத்திய அரசு 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.அதேபோல இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சாலை மேம்பாட்டையும், இன்ஜின்களின் செயல்பாட்டை அதிகரிக்க வேகம் அதிகரிக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.இதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், 2018ம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.மேலும், 2014ம் ஆண்டு அறிவிப்பின்படி, வாகனங்களுக்கு 60 முதல் 100 கிலோ மீட்டருக்குள் வேகத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கும்,அதன் அடிப்படையில் புதிய அறிவிப்பை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா