தமிழ்நாடு

"நூறு நாள் வேலை - 2 நாளுக்கான சிறப்பு ஊதியம்" - தமிழக அரசு அரசாணை வெளியீடு

நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு, சிறப்பு ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு, சிறப்பு ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, 2 நாட்களுக்கான ஊதியம், சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என, கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த திட்டத்தின் கீழ், மார்ச் மாதம் வேலை பார்த்த 26 லட்சத்து 84 ஆயிரத்து 989 பேருக்கு இரண்டு நாள் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதற்காக 123 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்