பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மூலம், நடப்பாண்டில் 270 மாணவர்களுக்கு கூடுதலாக இடம் கிடைக்கும் என்று திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் கூறினார். அந்த கல்வி நிறுவனத்தின் 15-வது பட்டமளிப்பு விழா வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய பொறியியல் கல்வி நிறுவனங்களின் தர வரிசையில் திருச்சி என்.ஐ.டி 10 வது இடத்தை பிடித்துள்ளதாக கூறினார். பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மூலம் நடப்பாண்டில் 270 மாணவர்களுக்கு கூடுதலாக இடம் கிடைக்கும் என்றும் தாமஸ் கூறினார்.