தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் 1.3 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 300 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 300 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மலேசியாவில் இருந்து வந்த 3 பேர் குளிர்சாதன பெட்டியின் மோட்டார் மற்றும் சூட்கேஸ் சக்கரம் ஆகியவற்றில் 900 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்துள்ளனர். அதேபோல் துபாயில் இருந்து வந்த 2 பேர் சூட்கேசில் மறைத்து வைத்திருந்த 400 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு 42 லட்சம் ரூபாய் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி