விளையாட்டு

உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தந்தி டிவி
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.முன்னதாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரிஸ்டலில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்கள் குவித்தது.அதிகபட்சமாக பாபர் அஜாம் 112 ரன்கள் எடுத்தார்.49.4 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் ஹசரத்துல்லா,சஹிதி ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இலக்கை அடைந்தது.இதே போல் கார்டிப்பில் இலங்கை தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றது.இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்