விளையாட்டு

இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்.. அடுத்ததடுத்து இடியாய் விழும் தகவல்கள் - கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய ஷாக்

தந்தி டிவி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், கொல்கத்தாவில் நடைபெறும் பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என, அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. இதனையொட்டி போட்டி நடைபெறும் மைதானங்களை ஆய்வு செய்து வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் குழு, இன்று கொல்கத்தா மைதானத்தை ஆய்வு செய்தது. இதனிடையே கொல்கத்தாவில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான போட்டிக்கு, பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என, கொல்கத்தா போலீசார் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சில உலக கோப்பை போட்டிகளின் தேதி மாற்றப்படவுள்ளதாக, தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்