விளையாட்டு

அடித்து ஓடவிட்ட வெஸ்ட்இண்டீஸ்.. அபாய கட்டத்தில் இந்தியா

தந்தி டிவி

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. கயானாவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்த‌து. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி, 152 ரன்கள் எடுத்த‌து. அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்களை எடுத்தார். பின்னர் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 18.5ஆவது ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்த‌து. இதன் மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை பெற்றுள்ளது.

CM Vijay Road Show | Maduranthakam | மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியை வணங்கி CM விஜய் ரோடு ஷோ..!

Asian Games | Cricket | IND vs SL | Asian Games கிரிக்கெட்டில் இலங்கையை புரட்டி எடுத்த இந்தியா

Mamata Banerjee | Trinamool | திரிணமூல் காங்., வங்கி கணக்குகள் முடக்கம் - மனு தள்ளுபடி

Ilaiyaraaja | Court | 'என் இனிய பொன் நிலாவே' இளையராஜாவின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Squash| Asian Games | CMVijay | Smash செய்த தமிழ் தங்கங்கள்.. பாராட்டுகளால்கொண்டாடி தீர்த்த CM விஜய்