விளையாட்டு

"ஓய்வு முடிவு எடுக்க வைத்த தோனி"-"தடுத்து நிறுத்திய சச்சின்" | மனம் திறந்த சேவாக்

2008ம் ஆண்டே ஓய்வு பெறத் திட்டமிட்டேன் சில போட்டிகளில் தோனி என்னை சேர்க்கவில்லை சச்சினின் வார்த்தைகள் என் எண்ணத்தை மாற்றின மனம் திறந்த அதிரடி தொடக்க வீரர் சேவாக்...

தந்தி டிவி

கடந்த 2008ம் ஆண்டே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறத் தான் திட்டமிட்டதாகவும், சச்சினின் வார்த்தைகள், தன் எண்ணத்தை மாற்றியதாகவும் முன்னாள் தொடக்க வீரர் சேவாக் மனம் திறந்து உள்ளார். கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடாததால், தோனி தன்னை சில போட்டிகளில் சேர்க்கவில்லை என்றும், அப்போது ஓய்வு பெற்றுவிடலாம் என்ற எண்ணம் எழுந்ததாகவும் கூறி உள்ளார். சச்சினிடம் இதுகுறித்து பேசியபோது, அவர் கூறிய வார்த்தைகள் தன் முடிவை மாற்றியதாகவும் சேவாக் தெரிவித்து உள்ளார். 2011 உலகக்கோப்பை தொடரில் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக சேவாக் திகழ்ந்தது நினைவுகூரத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்