மாமல்லபுரத்தில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள அதே அரங்கில் ரேபிட் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட குரோம்பேட்டை சேர்ந்த ஹிமானி மற்றும் ஹிமான்சி ஆகிய இரட்டை சகோதரிகள் இருவரும், விஸ்வநாதன் ஆனந்த், பிரக்யானந்தா இருவரும் தங்களுக்கு ரோல் மாடல் என தெரிவித்தனர்.