விளையாட்டு

விராட் கோலியின் சதம் வீண் - 43 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் அணி வெற்றி

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.

தந்தி டிவி

* புனேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 95 ரன்கள் எடுத்தார்.

* இதனை அடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறியது. கேப்டன் விராட் கோலி சதம் விளாசிய போதிலும் இந்திய அணி 47 புள்ளி 4 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் மேற்கு இந்திய தீவுகள் அணி 43 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மேற்கு இந்திய தீவுகள் அணி 1 க்கு 1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"