துபாயில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்திருந்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் சூர்யவன்ஷி ஐந்து ரன்களில் வெளியேறிய நிலையில், அரோன் ஜார்ஜ் அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்தார்.