TNPL |"மகளிருக்கும் TNPL கிரிக்கெட் தொடர் நடத்த திட்டம்"தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசராஜ் ஆண்களுக்கான டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரைப்போல் மகளிருக்கும் டிஎன்பிஎல் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசராஜ் கூறியுள்ளார்.10-வது டி.என்.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசராஜ் சேப்பாக்கத்தில் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மகளிர் டி.என்.பி.எல் தொடர் நடத்துவது குறித்து பல ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், மகளிருக்கு முதற்கட்டமாக காட்சி போட்டி நடத்தப்பட்டு அதில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தொடரை நடத்த முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் மைதான அமைவிடம் இன்னும் முழு வடிவம் பெறவில்லை என்றும், சென்னையா அல்லது கோவையா என இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார்