விளையாட்டு

டி.என்.பி.எல் 2018 - கோப்பையை வென்றது மதுரை

டி.என்.பி.எல். இறுதி போட்டியில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி மதுரை அணி கோப்பையை வென்றது

தந்தி டிவி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்த‌து. அதன்படி மதுரை அணியின் பந்துவீச்சாளர் அபிஷேக் தன்வர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால், திண்டுக்கல் அணி 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த‌து. தொடர்ந்து களமிறங்கிய மதுரை அணியில் தொடக்க ஆட்டக்கார‌ர் சர்குணம் உள்பட மூன்று வீர‌ர்கள் அடுத்தடுத்து ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். ஆனால், மற்றொரு தொடக்க ஆட்டக்கார‌ரான அருண் கார்த்திக் 75 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 17 ஓவர்களில் ஆட்டத்தை முடித்துவைத்தார். இதன்மூலம் டி.என்.பி.எல். போட்டிகளில் கடந்த இரு ஆண்டுகளாக ஒரு போட்டியிலும் வெற்றி பெறாமல் இறுதி இடத்தில் இருந்துவந்த மதுரை அணி, இந்தாண்டு கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்