விளையாட்டு

சேப்பாக் அணிக்கு எதிரான லீக் ஆட்டம் : திண்டுக்கல் அணி அபார வெற்றி

டி.என்.பி.எல். தொடரில் சேப்பாக் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

தந்தி டிவி
டி.என்.பி.எல். தொடரில் சேப்பாக் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நத்தத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீசியது. இதனையடுத்து சேப்பாக் அணி முன்வரிசை வீரர்கள் நிலைத்து நின்று ஆட தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீசன் மற்றும் ஹரி அதிரடியாக விளையாடினர். ஹரி 34 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய கேப்டன் ஜெகதீசன் 43 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். இதனால் திண்டுக்கல் அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 39 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றியை உறுதி செய்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’