விளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட்: 47 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது காரைக்குடி காளை

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி வெற்றி.

தந்தி டிவி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது. சென்னையில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்று முதலில் களமிறங்கிய காரைக்குடி காளை அணி, 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் அனிருதா, 28 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அசத்தினார்.

பின்னர் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் கேப்டன் கோபிநாத் 47 ரன்கள் அடித்தார். இதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்