விளையாட்டு

டி.என்.பி.எல் 3வது சீசன் - 11ஆம் தேதி துவக்கம்

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் இந்த ஆண்டு முதல் பிற மாநிலத்தை சேர்ந்த 2 வீரர்கள் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல் 3வது சீசன் போட்டி தொடர் வரும் 11ம் தேதி தொடங்குகிறது.

ஆகஸ்ட் 12ம் தேதி வரை மொத்தம் 33 நாட்கள் இப்போட்டிகள், நெல்லை, திண்டுக்கல், சென்னை மைதானங்களில் நடக்கிறது. இதுதொடர்பாக, சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சிவராமகிருஷ்ணன், வி.பி.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு முதல் பிறமாநிலத்தை சேர்ந்த வீரர்கள் அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கத்தின் தடையில்லா சான்றுகள் சமர்ப்பித்த பின்னர் டி.என்.பி.எல். போட்டிகளில் அனுமதிக்கப்பட உள்ளதாக சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்