விளையாட்டு

கோப்பையை வெல்ல போவது யார்?..சென்னையில் இன்று மோதும்...இரண்டு பெரிய அணி

தந்தி டிவி

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே பிரைம் வாலிபால் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை நடக்கிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த பிரைம் வாலிபால் லீக் தொடரில், புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த கோழிக்கோடு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. பரபரப்பாக நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் நடப்பு சாம்பியன் அகமதாபாத்தை வீழ்த்தி, இரண்டாவது அணியாக டெல்லி அணியும் இறுதிப்போட்டியை எட்டியது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில், இரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. வெற்றி பெரும் அணிக்கு ரூபாய் 40 லட்சமும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 30 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | Thanjavur | "தேர்தல்ல விசில் போடுறது நம்ம TVK.." - பாயிண்டுக்கு பாயிண்ட் Punch பதிலடி

TVK Vijay | Thanjavur | "வராதீங்கன்னு சொல்லியும் அவ்ளோ பேரு வராங்கன்னா..." - முஸ்தபா சொன்ன விஷயம்

TVK Vijay | Thanjavur | தஞ்சையே அதிர.. தொண்டர்கள் படைசூழ.. எண்ட்ரி கொடுத்த விஜய்

TVK Vijay |"எனக்காக இத பண்ணுங்களேன்.."-விஜய் சொல்ல சொல்ல செய்த தொண்டர்கள்.. கையை தூக்கி நின்ற காட்சி

Breaking | Today Gold Rate | உலகமே எதிர்பாராத அதிரடி மாற்றம் - போருக்கு நடுவே குறைந்த தங்கம் விலை