விளையாட்டு

இந்திய அணிக்கு தேர்வானது நம்பமுடியாத விஷயம் - தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி

இந்திய அணிக்கு தேர்வானது நம்பமுடியாத விஷயம் என்று தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல்.லில் கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் வருண் சக்கரவர்த்தி, அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆஸ்திரேலியா தொடருக்கான 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
இந்திய அணிக்கு தேர்வானது நம்பமுடியாத விஷயம் என்று தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல்.லில் கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் வருண் சக்கரவர்த்தி, அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆஸ்திரேலியா தொடருக்கான 20 ஓவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவேன் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை. வந்த வாய்ப்பை நழுவ விடாமல் அணியின் நிரந்தர இடத்தை பெற முயற்சிப்பேன். அணிக்கு தேர்வானது எனது குடும்பத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. என்னை தேர்வு செய்த தேர்வாளர்களுக்கு நன்றி கடன் பட்டு உள்ளேன் என்று தெரிவித்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு