விளையாட்டு

டி.என்.பி.எல் 5 வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் - சென்னையில் இன்று நடைபெறுகிறது

டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 5 வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடக்கிறது.

தந்தி டிவி

டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 5 வது சீசன் ஜுன் 10 ஆம் தேதி முதல் ஜூலை 12 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் சென்னையில் இன்று நடைபெற இருக்கிறது. இதில் மொத்தம் 633 வீரர்கள் பங்குபெற உள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர், சேப்பாக் அணிக்கு விளையாடி வரும் பந்து வீச்சாளர் பெரியசாமி, கோவை அணிக்கு விளையாடும் அபினவ் முகுந்த், திண்டுக்கல் அணிக்கு விளையாடும் ஜெகதீசன், ஆகியோர் முக்கிய வீரர்களாக கருதப்படுகின்றனர். டி.என்.பி.எல். தொடரை தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் விதமாக இம்முறை சேலம், கோவையில் போட்டி நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்