விளையாட்டு

பதக்க வேட்டையாடி நாட்டுக்கே பெருமை சேர்த்த தமிழக வீரர்கள் - சென்னை ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு

பதக்க வேட்டையாடி நாட்டுக்கே பெருமை சேர்த்த தமிழக வீரர்கள் - சென்னை ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு

thanthitv

#chess | #sports | #chennaiairport பதக்க வேட்டையாடி நாட்டுக்கே பெருமை சேர்த்த தமிழக வீரர்கள் - சென்னை ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 46-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய ஆடவர் அணியில் இடம்பெற்ற குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா, அணிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். தனிநபர் பிரிவில் குகேஷ் வெள்ளியும், பிரக்ஞானந்தா வெண்கலமும் வென்றனர். மகளிர் அணியில் இடம்பெற்ற வைஷாலி மற்றும் சவிதாஸ்ரீ, இந்திய அணி வெண்கலப் பதக்கம் வெல்வதில் முக்கிய பங்காற்றினர். தனிநபர் பிரிவில் சவிதாஸ்ரீ தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். சென்னை வந்த வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பெற்றோர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டிற்காக பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தொடர்ந்து கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் சவிதாஸ்ரீ தெரிவித்தார். விரைவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதே தனது இலக்கு என்றும் அவர் கூறினார்.

BREAKING || தாராபுரத்தில் நாளை மாநாடுதான் போல..! அமைச்சர் KAS கொடுத்த Elevation

BREAKING || சென்னையின் முக்கிய சாலையில் பிரமாண்ட பள்ளம்... ஒரு லாரியே உள்ள போயிடும் போல

BREAKING || சொத்து குவிப்பு வழக்கால் திமுக எம்பிக்கு வந்த சிக்கல் - ஐகோர்ட் போட்ட உத்தரவு

BREAKING || சென்னையில் பெற்றோர் கண்முன்னே மகனை துடிதுடிக்க கொ*ற பயங்கரம் - ரவுடியை தூக்கிய போலீஸ்

TVK | CM Vijay | Fix செய்த CM விஜய்.. கூட்டணிகளுக்கு பறந்த மெசேஜ்.. பரபரக்கும் அரசியல் களம்