விளையாட்டு

வெள்ளி, வெண்கலம் வென்று தமிழக வீரர்கள் அபாரம்

வெள்ளி, வெண்கலம் வென்று தமிழக வீரர்கள் அபாரம்

thanthitv

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வபிரபு பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்....

காமன்வெல்த் ஆடவர் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் பிரவீன் சித்ரவேலும், மதுரையைச் சேர்ந்த செல்வ பிரபுவும் களமாடினர்....

டிரிபிள் ஜம்ப் இறுதிப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட பிரவீன் சித்ரவேல் 16 புள்ளி 58 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை வசப்படுத்தினார்...

கடந்த காமன்வெல்த் தொடரில் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட பிரவீன், இம்முறை வெள்ளி வென்று அசத்தியுள்ளார்....

இதே போட்டியில் மதுரையைச் சேர்ந்த மற்றொரு தமிழக வீரர் செல்வ பிரபு 16 புள்ளி 52 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார்...

ஒரே போட்டியில் 2 தமிழக வீரர்கள் பதக்கம் வென்று அசத்தியுள்ள நிலையில் இருவருக்கும் முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்...

மேலும், பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாயும், செல்வ பிரபுவுக்கு 20 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்....

"72 ஆண்டுகளில் இந்தியா பார்க்காத மெடல்"-முதல்முறையாக வென்று..மேடையேறி கணவருக்கு நன்றி சொன்ன தமிழச்சி

BREAKING | "வரலாற்றிலேயே முதல்முறை... CM விஜய் எடுத்த மூவ்"-அமைச்சர் ஆதவ் சொன்னதும் அதிர்ந்த அரங்கம்

CM Vijay | Sports | அரங்கம் அதிர மாஸ் என்ட்ரி கொடுத்த CM விஜய் | மேடைக்கு செல்லும் முன் செய்த செயல்

BREAKING || பதக்கத்தோடு கெத்தாக வந்த வீரர்கள் - விழா எடுத்து விருந்து வைக்கும் CM விஜய்

Literature Nobel Prize | Anne Carson | இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு