விளையாட்டு

T20 Worldcup| ஜிம்பாப்வேயை பார்த்து நடுங்கும் அணிகள் - பீனிக்ஸாக எழுந்த பின்னணியில் பாகிஸ்தானி..!

ஜிம்பாப்வேயை பார்த்து நடுங்கும் அணிகள்

thanthitv

மண்டியிட்ட ஆஸி. ஜிம்பாப்வேயை பார்த்து நடுங்கும் `ஜாம்பவான்’ அணிகள் - பீனிக்ஸாக எழுந்த பின்னணியில் `ஒரு’ பாகிஸ்தானி..! #t20worldcup #zimbabwecricket #zimvsaus சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணியின் எழுச்சிப் பயணம் 2026 டி20 உலக கோப்பையில், தொடர் வெற்றிகளை பதிவு செய்த ஜிம்பாப்வே, சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை தங்கள் வசம் திருப்பியுள்ளது. 90களில் ஜிம்பாப்வே என்றாலே சர்வதேச கிரிக்கெட்டில் மிரட்டலான அணி என கூறப்படும் அளவுக்கு, வலுவான அணிகளை எல்லாம் திணறடித்தது. ஆண்டி ஃபிளவர் (andy flower), கிராண்ட் ஃபிளவர் GRANT FLOWER, ஹீத் ஸ்டிரீக் (heath streak), ஹென்றி ஓலங்கா (henry olonga) உள்ளிட்டோர் எதிரணிக்கு சிம்மசொப்பணம். இருப்பினும், பல்வேறு காரணங்களால், மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தது ஜிம்பாப்வே. இந்த சமயத்தில், பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட சிக்கந்தர் ராஸா 2013ம் ஆண்டு ஜிம்பாப்வே வீரராக அறிமுகமாகி, பின்னர் அணியின் கேப்டனாக வழி நடத்த தொடங்கினார். சரிவில் இருந்த அணியை படிபடியாக வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார் சிக்கந்தர் ராசா. குறிப்பாக, டி20யில் அவரது தலைமையில் அணி சிறப்பாக செயல்பட தொடங்கியது. தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தலைப்பு செய்தியானது இந்த ஜிம்பாப்வே அணி.. இதோடு நிறுத்தவில்லை, இளம் வீரர்களின் மிரட்டலான ஆட்டத்தால், இலங்கை அணியை, அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி உலக ரசிகர்களை திரும்பி பார்க்கச் செய்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வேயின் இந்த எழுச்சி பயணம், உணர்வுபூர்வமாக அமைந்துள்ளதோடு, அவர்களது அடுத்தடுத்த போட்டிகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Breaking TN Election 2026 விராலிமலையுடன் காலியான 6 தொகுதிகள் இடைத்தேர்தல் எப்போது?

Telegram Ban | Delhi High Court | நீட் தேர்வால் வந்த தடை - டெல்லி ஐகோர்ட் சென்ற டெலிகிராம்

Breaking| Bus Ticket Hike | தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வா? | போக்குவரத்து துறை முக்கிய அப்டேட்

Minister Ramesh | "அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை" - அமைச்சர் ரமேஷ் அதிரடி

Vaiko Meet CM Vijay | இன்றே முதல்வரை சந்திக்கும் வைகோ - பரபரக்கும் அரசியல் களம்