டி20 உலக கோப்பை - சூப்பர் 8க்கு தகுதி பெற்ற நியூசிலாந்து 
விளையாட்டு

டி20 உலக கோப்பை - சூப்பர் 8க்கு தகுதி பெற்ற நியூசிலாந்து

டி20 உலக கோப்பை தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 31வது லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி பெற்றது

thanthitv

டி20 உலக கோப்பை தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 31வது லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி பெற்றது

டாஸ் வென்ற கனடா பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், 20 ஓவர் முடிவில் 173 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கனடாவின் ஓபனர் பேட்ஸ்மேன் யுவராஜ் சாம்ரா, 65 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதன் மூலம் டி20 உலக கோப்பை தொடரில் சதம் அடித்த, முதல் இணை உறுப்பினர் நாட்டை சேர்ந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், தொடக்க வீரர்கள் வேகமாக பேவிலியனுக்கு திரும்பினாலும், நட்சத்திர வீரர்களான ரச்சின் ரவிந்திரா (rachin ravindra) 59 ரன்களும், கிளன் பிலிப்ஸ் (glenn phillips) 76 ரன்களும் குவித்து, 15.1வது ஓவரில் இலக்கை எட்டி வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த வெற்றியுடன் சூப்பர் 8 சுற்றுக்கும் நியூசிலாந்து அணி தகுதிபெற்றது. மேலும் இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருது, நியூசிலாந்து அணியின் கிளன் பிலிப்ஸுக்கு வழங்கப்பட்டது.

Crime | Death | கும்மிடிப்பூண்டி குழந்தை பாலியல் வன்கொடுமை சம்பவம்.. வெளியான பகீர் தகவல்

Vijayabaskar | Vijay | TVK |ADMK|முதல்முறையாக மவுனம் கலைத்தார் விஜயபாஸ்கர் -CM விஜய் பிறந்தநாளில்..?

TN Govt | CM Vijay | Magalir Urimaithogai | "மாதம் ரூ2500.." CM விஜய் முக்கிய ஆலோசனை

Aakash Case|``உடலை இன்று வாங்கவில்லை என்றால்..''- பெற்றோருக்கு ஐகோர்ட் மதுரை பெஞ்ச் பரபரப்பு உத்தரவு

Ramanathapuram | ராமநாதபுரம் டிராக்டர் விபத்தில் பலியான தலைமை காவலரின் கண்கள் தானம்