விளையாட்டு

டி20 - இந்தியாவை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

டி20 - இந்தியாவை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

thanthitv

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட், சூப்பர் 8 சுற்றில், இந்திய அணியை தென் ஆப்பிரிக்கா 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதில், டேவிட் மில்லரின் அதிரடி அரைசதத்தால், தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது.

188 ரன்கள் என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

ஷிவம் துபே அதிகபட்சமாக 42 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 18.5 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால், தென்ஆப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்