விளையாட்டு

டி20 தொடரை 2-1 கணக்கில் வென்ற இலங்கை.. டைம்டு-அவுட் - வங்கதேசத்தை கிண்டல் செய்த இலங்கை

தந்தி டிவி

சில்ஹெட் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 174 ரன்கள் சேர்த்தது. குசல் மெண்டிஸ் 86 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய வங்கதேசம் கடைசி ஓவரில் 146 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை வேகப்பந்துவீச்சாளர் நுவான் துஷாரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இலங்கை வென்றது. கோப்பையை வென்ற பிறகு இலங்கை வீரர்கள் டைம்டு-அவுட் செலபிரேஷன் செய்து வங்கதேச அணியை கிண்டல் செய்தனர். கடந்த உலகக்கோப்பை தொடரில் இலங்கை வீரர் மேத்யூஸின் விக்கெட்டை டைம்டு-அவுட் முறையில் வங்கதேசம் வீழ்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இலங்கை வீரர்களின் செயல் இருந்தது.

Vijay | CBI | ``விஜய் எப்போது வேண்டுமானாலும்..’’ - CBI ஆபீஸில் மாறிய நிலவரம்

Vijay | Pawan Kalyan | ``செய்தது தவறு’’ - NDA, விஜய் விவகாரத்தில் உடைத்து பேசிய பவன்

Kovai Police Issue | கோவையில் பெண் போலீஸ் பாலியல் வன்கொடுமை விவகாரம் - வெளியானபேரதிர்ச்சி தகவல்

BREAKING || பரபரப்பான சூழலில் முதல்வர் சரமாரி அட்டாக்

Breaking | TVK Vijay | CBI | கேள்விகளை கேட்காத சிபிஐ? | வெளியான முக்கிய அப்டேட்