விளையாட்டு

ஹெல்மெட் அணியாமல் அதிவேக பயணம் - பறிபோன உயிர்

தந்தி டிவி

சென்னை அண்ணாசாலையில்... ஹெல்மெட் அணியாமலும், போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாகவும் பயணித்ததில் இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்திருக்கிறார்.

சென்னை அண்ணா சாலையில்தான் இந்த விபத்து அரங்கேறி இருக்கிறது...

ஓமந்தூரார் மருத்துவமனை அருகே... பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட மாநகர பேருந்து மீது, இரண்டு இளைஞர்களுடன் மின்னல் வேகத்தில் வந்த பைக் பயங்கரமாக மோதி இருக்கிறது.

அரசு பேருந்து மீது பைக்கில் வந்து மோதிய இளைஞர்கள்

பேருந்தின் பக்கவாட்டில் மோதி, தூக்கி வீசப்பட்ட இருவரும், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடி துடித்தது அக்கம்பக்கத்தினரை பதற செய்தது...

இருவரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை...

திருவல்லிக்கேணி ஆதிகான் தெருவில் உள்ள போட்டோ ஸ்டூடியாவில் பணிபுரிந்த அசோக் குமார் மற்றும் கெளதம் ஆகிய இருவர் விபத்துக்குள்ளான இந்த சம்பவத்தில், இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்...

ஒருவர் பலி - தீவிர சிகிச்சை பிரிவில் மற்றொருவர் அனுமதி

இதில், அசோக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது...

மற்றொரு இளைஞரான கெளதம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்...

மற்றொரு இளைஞரான கெளதம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உயிரும் பிரிந்தது...

ஜீரோ ஆக்சிடென்ட் பெயரில் மாநகர போக்குவரத்து காவல்துறை ஒருபுறம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சூழலில், இருவர் தலைக்கவசம் அணியாமல் அலட்சியமாகவும் அதிவேகமாவும் வந்து விபத்துக்குள்ளாகி இருக்கும் இந்த சம்பவமும், இதனால் அரங்கேறிய உயிர் பலியும் வருத்தமளிக்க செய்கிறது...

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்