விளையாட்டு

ப்பா.. Whatta மேட்ச்.. கடைசி பந்து வரை பரபர ஐபிஎல் த்ரில்லர்

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் பரபரப்பாக நடைபெற்ற 27வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வென்றது.

முலான்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிதானமாக ரன் சேர்த்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அஷூதோஸ் சர்மா 31 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 148 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் தனுஷ் கோட்டியன் 24 ரன்களும் ஜெய்ஸ்வால் 39 ரன்களும் எடுத்தனர்.

கேப்டன் சஞ்சு சாம்சன் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 2 பந்துகளில் ரன் எடுக்கப்படாத நிலையில், களத்தில் இருந்த ஹெட்மயர் 3வது பந்தில் அதிரடியாக சிக்ஸ் அடித்தார்.

தொடர்ந்து 2 ரன்கள் ஓடிய ஹெட்மயர், 5வது பந்தில் மீண்டும் ஒரு சிக்சர் அடித்தார். இதனால் 19 புள்ளி 5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானின் ஐந்தாவது வெற்றியாக இது அமைந்துள்ளது. 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்