விளையாட்டு

இந்தியாவில் பிரபலமாகும் ஸ்கூபா டைவிங்

கடலுக்கு அடியில் நடைபெறும் சாகச விளையாட்டு, இந்தியாவில் பிரபலமாகி வருவதை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...

தந்தி டிவி

SCUBA DIVING.. கடலுக்கு அடியில் நடைபெறும் சாகச விளையாட்டில் பிரபலமான ஒன்று.. SELF CONTAINED UNDERWATER BREATHING APPARTUS என்பதின் சுருக்கமே SCUBA DIVING.. 18ஆம் நூற்றாண்டிலே கடல் சார் உயிரினங்கள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக இது உருவாக்கப்பட்டது. தற்போது SCUBA DIVING சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் சாகச விளையாட்டாக மாறிவிட்டது.

இந்தியா, இந்தோனேஷியா, எகிப்து, ஆஸதிரேலியா உள்ளிட்ட நாடுகளில் SCUBA DIVING மிகவும் பிரபலமாகி விட்டது. அவ்வளவு ஏன் சென்னையில் கூட SCUBA DIVING உள்ளது. கண்களை கவரும் மீன்கள், விதி விதமான கடல்வாழ் உயிரினங்களுக்கு இடையே, கடலில் நீந்திச் செல்வது மறக்க முடியாத அனுபவமாக திகழும். நீந்துவதற்கு ஏதுவாக காலில் விசேஷ உபகரணங்கள் இருப்பதால், சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த சிரமும் இருக்காது.

SCUBA DIVING அனைவராலும் மேற்கொள்ள முடியாது. அஸ்துமா உள்ளிட்ட மூச்சு கோளாறு தொடர்பான நோய்கள்ல் பாதிக்கப்படுபவர்கள் , SCUBA DIVING ஐ தவிர்ப்பது மிகவும் நல்லது. SCUBA DIVING ல் உலக சாதனைகளும் படைக்கப்பட்டு வருகிறது. கடலுக்கு அடியில் 332 மீட்டர் தூரம் வரை எகிப்து வீரர் அகமது கபர் சென்றதே தற்போதைய உலக சாதனை ஆகும்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி