விளையாட்டு

அழிவு பாதை நோக்கி ஒருநாள் கிரிக்கெட் - ஜாம்பவான் சச்சின் எச்சரிக்கை

2 புதிய பந்துகளை பயன்படுத்துவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்..

தந்தி டிவி

2 புதிய பந்துகளை பயன்படுத்துவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 2 பந்துகளை பயன்படுத்துவது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தார். இதனால், பந்துவீச்சாளர்களால் ரிவர்ஸ் ஸ்விங் என்ற யுக்தியை பயன்படுத்த முடியாமல் திணறுவதாகவும், இது கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு நல்ல தல்ல என்றும் சச்சின் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்களை குவித்ததை சுட்டிக்காட்டியே சச்சின் இவ்வாறு கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்