விளையாட்டு

அணியில் எடுக்கப்படாத ரோகித் சர்மா - அதிர்ச்சியில் ரசிகர்கள் | rohit sharma

தந்தி டிவி

2023 உலகக் கோப்பை கனவு அணியின் கேப்டனாக விராட் கோலியை நியமித்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது...விராட் கோலி தலைமை தாங்கும் அந்த அணியில் குயின்டன் டீ காக், டேவிட் வார்னர் ஆகியோர் துவக்க வீரர்களாகவும் ரச்சின் ரவீந்தரா, ஐடன் மார்க்கம் ஆகியோர் மிடில் ஆர்டரிலும் இடம் பிடித்துள்ளனர். அதே போல், ஆல் ரவுண்டர்கள் பிரிவில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் மற்றும் தென்னாப்பிரிக்காவின் மார்க்கோ ஜான்சன் ஆகியோர் உள்ளனர். மேலும் இந்தியாவின் ஷமி, பும்ரா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பிடித்துள்ள நிலையில், ஆடம் ஜாம்பா முதன்மை ஸ்பின்னராகவும், இலங்கையின் மதுசங்கா 12-வது வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வைக்கும் கேப்டன் ரோகித் சர்மா அணியில் இடம் பெறாதது, ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்