விளையாட்டு

"ரோகித் சர்மா தான் நடப்பு உலகக் கோப்பை தொடரின் நாயகன்" - ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஹைடன் புகழாரம்

தந்தி டிவி

நடப்பு உலக கோப்பை தொடரின் நாயகன் ரோகித் சர்மா தான் என, ஆஸ்திரேலியா ஜாம்பவான் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். விராட் கோலி அளவுக்கு ரோகித் சர்மா ரன்கள் அடிக்காவிட்டாலும், அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். நடப்பு உலக கோப்பை தொடரில் 550 ரன்கள் குவித்துள்ள ரோகித் சர்மா, அதில் 350 ரன்களை முதல் 10 ஓவர்களில் எடுத்துள்ளார். 550 ரன்களில் 416 ரன்களை அவர், பவுண்டரி மூலமே எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, ஒரு உலக கோப்பை தொடரின் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன், ஒரு உலக கோப்பை தொடரில் 500 ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற சாதனைகளை ரோகித் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை