விளையாட்டு

குஜராத் கோட்டையில் கடைசி ஓவரில் பஞ்சாப் த்ரில் வெற்றி

தந்தி டிவி

#gujarattitans | #punjabkings

குஜராத் கோட்டையில் கடைசி ஓவரில் பஞ்சாப் த்ரில் வெற்றி

ஐபிஎல் தொடரில் பரபரப்பாக நடைபெற்ற 17வது லீக் போட்டியில் குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி பெற்றது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, கேப்டன் சுப்மன் கில்லின் அபாரமான ஆட்டத்தால் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 89 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடர்ந்து 200 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.16வது ஓவரில் 150 ரன்களுக்கு பஞ்சாப் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், சஷாங் சிங், அஸ்தோஷ் சர்மா ஜோடி அதிரடியாக விளையாடி பஞ்சாப்பை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றது. தர்சன் நல்கன்டே வீசிய கடைசி ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டபோது, முதல் பந்தில் அஸ்தோஷ் சர்மா ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு அதிகரித்த நிலையில், கடைசி ஓவரின் 5வது பந்தில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 200 ரன்கள் எடுத்த பஞ்சாப் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.பஞ்சாப் வீரர் சஷாங் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் பஞ்சாப்பின் வெற்றிக்கு வழிவகுத்தார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்