டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று, டெல்லி திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற சுமித் அன்டில், வெள்ளிப் பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, வட்டெறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற யோகேஷ் கத்துனியா உள்ளிட்ட வீரர்கள் டெல்லி வந்தனர். அவர்களுக்கு மாலை அணிவித்தும், உற்சாக குரலெழுப்பியும் விமான நிலையத்தில் திரண்டு இருந்தவர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.