விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பாக். வீரர் வஹாப் ரியாஸ் ஓய்வு

தந்தி டிவி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதால பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 83 விக்கெட்கள், ஒருநாள் போட்டிகளில் 120 விக்கெட்கள், டி20 போட்டிகளில் 34 விக்கெட்களை ரியாஸ் வீழ்த்தியுள்ளார். ஓய்வை அறிவித்துள்ள வஹாப் ரியாஸ் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அரசியலில் ஈடுபட்டுள்ள வஹாப் ரியாஸ் கடந்த 2020ம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடவில்லை. ஓய்வுக்குப் பிறகு ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வஹாப் முடிவு எடுத்துள்ளார். கடந்த 2011 உலகக்கோப்பை தொடரில் இந்தியா வுக்கு அரையிறுதி ஆட்டத்தில் வஹாப் ரியாஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதையும், 2015ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் வஹாப் ரியாஸின் அச்சுறுத்தல் மிக்க பந்துவீச்சையும் ரசிகர்களால் மறக்க முடியாது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்