விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி நாளை தொடக்கம் - "துவக்க விழா 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்பு"

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் இந்தியா சார்பாக 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்பார்கள் என இந்திய ஒலிம்பிக் அணி அதிகாரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் இந்தியா சார்பாக 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்பார்கள் என இந்திய ஒலிம்பிக் அணி அதிகாரி தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கவிழா நாளை மாலை, ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் துவங்க உள்ளது. இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டி ஏற்பாடு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஒலிம்பிக் அதிகாரி பிரேம் குமார் வெர்மா, கொரோனா எதிரொலியால், ஒலிம்பிக் போட்டிகளில் துவக்க விழாவில் இந்தியா சார்பாக 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களையும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி வருவதால், நாளை நடைபெறும் தொடக்க விழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்