விளையாட்டு

"பிரான்ஸ் கால்பந்து அணி பன்முகத்தன்மையுடன் விளங்குகிறது" - அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பெருமிதம்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணி, பன்முகத்தன்மையுடன் விளங்குவதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணி, பன்முகத்தன்மையுடன் விளங்குவதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். தென்ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் அந்நாட்டு முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் 100வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய ஒபாமா, பிரான்ஸ் கால்பந்து அணி நடப்பு ஆண்டு உலகக்கோப்பையை வென்றதை பாராட்டினார். அந்த அணியில் இடம்பெற்ற வீரர்களில் பெரும்பாலானோர் கறுப்பினத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர் அதனைக் குறிப்பிட்டு பேசினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்