விளையாட்டு

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : அரையிறுதிக்கு 7வது முறையாக ஜோகோவிச் தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு 7வது முறையாக ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.

தந்தி டிவி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு 7வது முறையாக ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், ஜப்பான் வீரர் நிஷிக்கோரியை அவர் எதிர்கொண்டார். 6க்கு1, 6க்கு1 என்ற கணக்கில் ஜோகோவிச் முன்னிலையில் இருந்த போது நிஷிகோரி காயம் காரணமாக வெளியேறினார். இதனையடுத்து 7வது முறையாக ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய போது எல்லாம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் : காலிறுதியில் செரினா வில்லியம்ஸ் தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை பிலிஸ்கோவைவை எதிர்கொண்ட செரினா, 4க்கு6,6க்கு4,5க்கு7 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார். இதன் மூலம் செரினா வில்லியம்ஸ் தொடரிலிருந்து வெளியேறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்