விளையாட்டு

இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட நிதிஷ் - சுந்தர் இணை

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது. அடுத்ததாக முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் - நிதிஷ்குமார் ரெட்டி இணை, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அரைசதமடித்து அவுட்டான நிலையில், மறுமுனையில் நேர்த்தியாக விளையாடிய நிதிஷ்குமார் ரெட்டி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 358 ரன்களை எடுத்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவை காட்டிலும் 116 ரன்கள் பின்தங்கியுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்