விளையாட்டு

கும்ப்ளேவின் சாதனையை தூக்கி சாப்பிட்ட அஸ்வின்

தந்தி டிவி

இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில், அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்திய மண்ணில் அவர் வீழ்த்திய டெஸ்ட் விக்கெட்டுகளின் எண்ணிக்கை 354 ஆக உயர்ந்தது. இதன்மூலம், இந்தியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளை இந்தியாவில் வீழ்த்தியிருந்ததே, இதுவரை சாதனையாக இருந்தது. மேலும் அஸ்வின், அதிகமுறை ஒரு டெஸ்ட் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற, கும்ப்ளேவின் மற்றொரு சாதனையை சமன் செய்தார். இருவரும் 35 முறை, ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்