விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து தொடர்/அரையிறுதிக்கு நெதர்லாந்து முன்னேற்றம்

தந்தி டிவி

ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் துருக்கி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் துருக்கி வீரர் சமத் அகாய்டின் கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் துருக்கி முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் ஆக்ரோஷமாக நெதர்லாந்து ஆடியது. 70வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ஸ்டெஃபான் டி வ்ரிஜ் பதில் கோல் அடித்தார். 76வது நிமிடத்தில் துருக்கி வீரர் மெர்ட் முல்டர் OWN GOAL போட்டது, நெதர்லாந்திற்கு சாதகமானது. பரபரப்பான ஆட்ட நேர முடிவில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

Madhya Pradesh | Train | ரயிலில் `தீ' என பரவிய வதந்தியால் ஓடிய பயணிகள் - மற்றொரு ரயில் மோதி பலர் பலி

Neet Exam | நீட் மறுதேர்வு ஹால் டிக்கெட்.. வெளியானது முக்கிய அறிவிப்பு

Ragava Lawrence | ``நாயோடு ஒப்பிட்டேனா?’’ - ராகவா லாரன்ஸ் திடீர் விளக்கம்

ADMK | TVK | "EPS தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டார்" - மரகதம் குமரவேல் அதிரடி

Cricket | TNPL கிரிக்கெட் தொடர் - வெளியான லிஸ்ட்