விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த RCB

தந்தி டிவி

மகளிர் ப்ரீமியர் லீக் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில், மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பெங்களூரு, 20 ஓவர்களின் முடிவில் 135 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி, சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், கடைசி 3 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் மும்பையே வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத்தும், சஜனாவும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் மும்பை அணிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை வீசிய ஆஷா சோபனா, 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு, மகளிர் ப்ரீமியர் லீக்கின் இறுதி போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதி போட்டியில், பெங்களூரு அணி, டெல்லியை எதிர்கொள்ளவுள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்