விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறுகிறாரா?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தந்தி டிவி

சமீபகாலமாக தோனியின் ஆட்டம் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. எப்போதும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியை ஆட்டம்காண வைப்பவர் தோனி... ஆனால், தற்போது நடைபெற்றுவரும் இங்கிலாந்து தொடரில் அவரது ஆட்டம் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அடுத்த உலக கோப்பை தொடரும் இங்கிலாந்தில் தான் என்பதால், தோனிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பதற்கு முன்பாக நடுவரிடம் இருந்து பந்தை பெற்று சென்றார் தோனி, அடுத்த நாள் தோனி ஓய்வை அறிவித்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில், தோனி நடுவரிடம் இருந்து பந்தை பெற்று சென்றுள்ளார். இதனால், அவர் எப்போது வேண்டுமானாலும் ஓய்வை அறிவிப்பார் என்ற தகவல் பரவ, அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்