விளையாட்டு

தோனியின் அறிவுரை தவறாக தான் முடிந்தது - குல்தீப் யாதவ்

பந்துவீசும் போது தோனி தமக்கு அளித்த அறிவுரை பெரும்பாலும் தவறாக தான் முடிந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பந்துவீசும் போது தோனி தமக்கு அளித்த அறிவுரை பெரும்பாலும் தவறாக தான் முடிந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். விக்கெட் கீப்பராக செயல்படும் தோனி, பெரும்பாலும் பந்துவீச்சளர்களுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்று அறிவுரையை வழங்குவார். இது குறித்து மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குல்தீப் யாதவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், தோனி அளிக்கும் பெரும்பாலான அறிவுரைகள் தவறாக தான் முடிந்ததாகவும், ஆனால் இது குறித்து தோனியிடம் ஏதும் கூற முடியாது என்று பதில் அளித்தார். மேலும் தோனி சக வீரர்களிடம் பேசவே மாட்டார் என்று குறிப்பிட்ட குல்தீப், ஏதேனும் கிரிக்கெட் குறித்து இருந்தால் மட்டுமே பேசுவார் என்றார். தோனி மீது குல்தீப் யாதவ் வைத்துள்ள விமர்சனம், கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு