விளையாட்டு

MI-க்கு வந்த சோதனை... ஆறுதலுக்கு கூட கிடைக்காத வெற்றி

தந்தி டிவி

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது....

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது.

பின்னர், 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து196 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

அந்த அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 68 ரன்களும் , நமன் திர் 62 ரன்களும் எடுத்தனர்....

இதன்மூலம் நடப்பு தொடரில் 14 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி, 4ல் மட்டுமே வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.

29 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு, 75 ரன்களை விளாசிய லக்னோ வீரர் நிகோலஸ் பூரன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்