விளையாட்டு

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியல் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் சேவாக் சேர்ப்பு

தந்தி டிவி

சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கியவர்களை ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்த்து ஐசிசி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் புதிதாக 3 பேரை ஹால் ஆஃப் ஃபேமில் ஐசிசி இணைத்து உள்ளது. இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக், இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி, இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்தா டி சில்வா ஆகிய மூவரும் ஹால் ஆஃப் ஃபேமில் புதிதாக இணைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மூவரையும் வருகிற 15ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்திற்கு முன்பாக ஐசிசி கவுரவிக்க உள்ளது. வீரேந்திர சேவாக் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டு இருப்பதால், ரசிகர்கள் அவரது கேரியரை சமூக வலைதளங்களில் நினைவுகூர்ந்து வருகின்றனர்

BREAKING || தன் கையாலேயே ரேஷன் பொருட்களை வழங்கிய CM விஜய்

BREAKING || "கார் வேண்டாம் நடந்தே போவோம்" - திடீரென இறங்கி நடக்க ஆரம்பித்த CM விஜய்

BREAKING || பெரம்பூரில் தன் ஆபிஸில் CM விஜய்... வெளியே கூடிய பிரமாண்ட கூட்டம்

🔴LIVE : பெரம்பூர் MLA அலுவலகத்தை திறந்துவைத்து சீட்டில் அமர்ந்த CM விஜய்

🔴LIVE : பிரசார வாகனத்தில் பெரம்பூர் செல்லும் CM விஜய் | தொடர் நேரலை CM Vijay | Perambur