விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கொல்கத்தா 5வது வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

தந்தி டிவி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா சால்ட் லேக் அரங்கத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு - கொல்கத்தா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. விறுவிறுப்பான முதல் பாதியில் இரண்டு அணிகள் கடுமையாக முயற்சித்தும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இரண்டாம் பாதியில் 47வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ரானே தட்டிக் கொடுத்த பந்தை வில்லியம்ஸ் கோலாக்கினார் . இறுதிவரை போராடிய பெங்களூரு அணியால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் கொல்கத்தா 1க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்