அசாமில் கடந்த 9 ஆம் தேதி அகில இந்திய அளவிலான கேலோ இந்தியா கபடி போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு சார்பில் திருநின்றவூரை அடுத்த புலியூரை சேர்ந்த வேன் ஓட்டுனரான புருஷோத்தமனின் மகள் ஜெயஸ்ரீ தமிழ்நாடு அணியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். புலியூருக்கு திரும்பிய அவருக்கு மேள தாளங்கள் முழங்க மலர் தூவி ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.