விளையாட்டு

குமரியில் ப்ளஸ் 2 தேர்வு எழுதும் முன் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி.. குழப்பத்தில் போலீசார்

தந்தி டிவி
• நாகர்கோவில் தெரிசனங்கோப்பு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி சுதா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மகன் மற்றும் மகளை, தாய்மாமன் சுரேஷ் என்பவர் வளர்த்து வந்துள்ளார். • 17 வயதான சிறுமி, நாகர்கோவில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். • மாணவி பொதுத் தேர்வை எழுத இருந்த நிலையில், கடந்த 11ம் தேதி, வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். • பின்னர் மாணவியை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தபோது, அதிக சத்து மாத்திரைகள் உட்கொண்டது பரிசோதனையில் தெரியவந்தது. • தொடர்ந்து, மாணவிக்கு தீவிர சிகிச்சை அளித்தும், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மாணவிக்கு அதிக சத்து மாத்திரைகள் கிடைத்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். • மேலும், மாணவியின் செல்போன் மாயமானதால், கடைசியாக செல்போனில் பேசிய நபர்களின் விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்